அனைத்து திட்டங்களையும் ஆன்லைனில் பெற புதிய நடைமுறை – அமைச்சர் அறிவிப்பு
அதிகளவில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தமிழ்நாடு மக்கள்தான் என பேரவையில் பழனிவேல் தியாகராஜன் தகவல்.
ஆன்லைன் மற்றும் செயலி மூலம் அரசின் திட்டங்கள், சேவைகளை பெறுவதற்கு புதிய நடைமுறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர், பென்ஷன், பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றையும் ஆன்லைன் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தியாவிலேயே அதிகளவில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தமிழ்நாடு மக்கள்தான். பொதுமக்களின் இல்லம் தேடி அரசின் சேவைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.