தமிழகம் வந்தால் புது சக்தி கிடைக்கிறது- பிரதமர் மோடி..!
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசினார். அப்போது “எனது தமிழ் குடும்பமே என தமிழில் பேசி மோடி தனது உரையை தொடங்கினார். எனது தமிழ் குடும்பமே; முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 20,000 கோடி மதிப்புள்ள திட்டங்களால் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும். தொடங்கப்பட்டுள்ள திட்டங்களால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.
தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன்
கடந்த ஆண்டின் இறுதியில் மழை, வெள்ளம் மூலம் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். கனமழை காரணமாக நம் பலபேரை இழக்க விளக்க வேண்டி இருந்தது. தமிழகத்தில் கனமழையால் உயிரிழப்பு, பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்ப நிலை எனக்குள்ளே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியான வேளையிலே மத்திய அரசு தமிழகத்திற்கு துணையாக நிற்கிறது. சாத்தியமான அனைத்து ஆதரவையும் மாநில அரசுக்கு நாங்கள் அளித்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்பாக நம் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை இழந்துள்ளோம். அவர் சினிமாவிலும், அரசியலும் கேப்டனாக திகழ்ந்தவர்.
தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!
திரைப்படங்களின் அவரது செயல்பாடு காரணமாக அதன் மூலம் மக்களின் இதயங்களில் கொள்ளை கொண்டு இருக்கிறது. ஒரு அரசியல்வாதி என்ற முறையிலேயே அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளார். நான் அவருக்கு எனது அஞ்சலியை கணிக்கையாக அளிக்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழமான இரங்கலை உரித்தாக்கி கொள்கிறேன்.
நான் தமிழ்நாட்டில் இருக்கும் வேளையிலே நான் தமிழ் மண்ணின் மேலும் ஒரு மைந்தரான எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களையும் நினைவு கூறுகிறேன். அவர் நமது நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக ஒரு முக்கியமான பங்களிப்பை அளித்தார். கடந்தாண்டிலேயே அவரையும் நாம் இழந்து இருக்கிறோம். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாசாராத்தை நான் கற்றுக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
காசி தமிழ் சங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழில் பெருமையை எடுத்து செல்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி. தமிழகம் வேகமாக வளர்ந்தால் இந்தியாவில் வளர்ச்சி வேகம் எடுக்கும். அடுத்து 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்ற வேண்டும். கலாச்சாரத்துடன் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்தியாவில் கலாச்சார பண்பாடு வளர்ச்சியின் பிரதிபலிப்பு தமிழ்நாடு, இங்கு வரும்போது எல்லாம் புதிய சக்தி கிடைக்கிறது” என தெரிவித்தார்.