மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், அதில் தமிழகத்தில் சில சொத்துக்களும் உள்ளது.
மத்திய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாரிடம் விட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 491 கிமீ தேசிய நெடுஞ்சாசலை, தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும் தனியாருக்கு விடப்பட உள்ளன. மேலும், நீலகிரி மலை ரயிலுக்கு தனியார் குத்தகை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றும் தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டமாகும்.
இந்த திட்டம் மூலம் அடுத்த 4 வருடத்தில் மத்திய அரசின் எந்தெந்த சொத்துக்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது எனப் பட்டியலிடப்படும் என்றும் மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட புதிய திட்டம் என்றும் தனியாருக்கு விற்கப்படவில்லை எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…