இனிமேல் ஹெலிகாப்டர் பயணம் தான்..! அமைச்சர் தங்கம் தென்னரசு அசத்தல் அறிவிப்பு..!
தமிழ்நாடு வான்வழி போக்குவரத்தை மேம்படுத்த புதிய திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்த புதிய திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த உதவும் வகையில் தமிழ்நாடு வான்வழி இணைப்புத் திட்டத்திற்கான வழிமுறை வகுக்கப்படும் எனவும் இத்திட்டத்தின் மூலம் செயல்பாட்டில் இல்லாத ஹெலிபேடுகளை கண்டறிந்து ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் மூலம், நகரங்களுக்கு இடையேயான வான்வெளி இணைப்பை மேம்படுத்த முடியும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்தார்.