சமீபத்தில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று 2 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்து உள்ளது.ரூ.650 கோடியில் மத்திய , மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.
ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து. மத்திய அரசு இந்தியா முழுவதும் 2020-21-ம் ஆண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசு சார்பாக அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இதில் தமிழக அரசு சார்பில் அனுப்பிய திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரூ.3200 கோடி செலவில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருந்தது.
தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…