ஏற்கனவே 24!அடுத்து 6! தற்போது 3! தமிழ்நாட்டில் உதயமாகும் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்!
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொத்தம் 24 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மொத்தம் 3350 மருத்துவ இடங்கள் உள்ளன.
இது போக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
தற்போது மேலும், 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நகை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க பட உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கல்லூரியிலும் 150 இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் அதிகமாக கிடைக்கும்.
இதற்கென ஒவ்வொரு கல்லூரிக்கும் 325 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் நிதி ஒதுக்க உள்ளது.