வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.