நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஓய்வுபெற்ற ஏகே ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ஜூன் மாதம் 17ம் தேதி தமிழக அரசிடம் ஆய்வு நடத்திய அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.
இதனிடையே உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, இதனை செயல்படும் பொருட்டில் தலைமை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை எப்படி புரிந்துகொள்வது, புதிய சட்டத்தை இயற்றி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…