விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதில், அங்கு தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆயினும் மக்கள் பலர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டது. அங்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்ட மக்கள், எப்படியாவது பிரியாணி வாங்கி விட மாட்டோமா என முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின் பற்றாமலும், ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.
இதனால் அங்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…