#BREAKING: புதிய அரசுப் பணியிடங்களுக்கு தடை விதித்தது- தமிழக அரசு.!

Default Image

தமிழகத்தில் புதிய அரசுப் பணியிடங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.

 கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை  மீட்க அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதனால், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம் என்றும் ஆனால், புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கபட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்க  தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

செலவை குறைக்க தமிழக அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை.!

மேலும், தமிழக அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்க, அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்