சென்னை சேப்பாக்கம் மைதானத்தின், கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய பெவிலியனை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கூடுதல் இருக்கைகள் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து தற்போது புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ளது. மேலும் இந்த புதிய கேலரிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கேலரியை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் முக்கியமாக சி.எஸ்.கே அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஏற்கனவே இந்த மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா வின் பெயர் சூட்டப்பட்டு அண்ணா பெவிலியன் அமைந்துள்ளது. சேப்பாக்கம் மைதானம் கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் புதுப்பிக்கப்பட்டது. தற்போது கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு பணிகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில், முதல் போட்டியாக இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22இல் நடைபெறுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…