ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் நூதன மோசடி…! ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு…!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடி ஈடுபட்டதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு.
இன்று மோசடியில் பலர் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாட்சப்பில் ஈரோடு ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து, அதிகாரிகளின் வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதில் ரூ.10,000 அடங்கிய அமேசான், பிளிப்கார்ட் பரிசு அட்டையை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து, குறுஞ்செய்தி அனுப்பிய நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, எதிரில் பேசியவர் இந்தியில் பேசியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகமடைந்த அதிகாரிகள் ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்நது, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.