கொளத்தூர் தொகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு.! 

Tamilnadu CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். முன்னதாக திருவிக நகர் பகுதியில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை திறந்து வைத்தார்.

திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய புதிய கால்பந்தாட்ட மைதானத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு விளையாட்டு வீரர்களுக்கு புதிய விளையாட்டு உபகாரங்களை வழங்கினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி ஒன்றையும் டாஸ் போட்டு துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

அதன் பிறகு ஜவகர் நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு இலவச கண் மருத்துவமனையினை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு பூரணமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இறுதியாக கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் விழாவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.

முன்னதாக இன்று காலை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருந்தார். அதன் பிறகு இன்று மலையில் தனது  சொந்த தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களை துவங்கி வைத்தும் வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்