புதிய அபராத கட்டணம்!,முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத கட்டணம் குறைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் மோட்டார் வாகன புதிய சட்டம் அமலுக்கு வந்தது. குறிப்பாக போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.இதற்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் மோட்டார் வாகன புதிய சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.இதனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதிய அபராத கட்டணங்களை மாநில அரசுகள் குறைத்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில்,முதலமைச்சருடன் ஆலோசித்து, மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் கொண்டு வந்துள்ள அபராதத் தொகை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.