புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்து இருக்கிறது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த “கல்விக் கொள்கை-2020” -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.
2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நீங்கள் ஆலோசனை செய்கிறீர்கள் எனவே பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்ய வேண்டாம்.
அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்த கோரிக்கையை ஏற்கபடாத நிலையில் ரமேஷ் பொக்ரியாலுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…