சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது-கனிமொழி
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது, இந்த கல்வி கொள்கையை திமுக எதிர்க்கும். ஆயிரமாயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ளவர்கள் போராடுவோம்.
எந்தெந்த வழிகளில் இந்தியை திணிக்க முடியுமோ அதை செய்து வருகிறார்கள் .நாம் ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று பேசினார்.