கல்வி கொள்கை அம்சங்கள் குறித்து ஆராய குழு அமைக்கிறது தமிழக அரசு.
கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிடப்பட்டது. இதன் மீது கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.இதன் பின் மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலியே பயிற்றுவிக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போன்றவை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆனால் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,மாண்புமிகு அம்மாவின் அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும்,வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கிறது தமிழக அரசு.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…