#BREAKING: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைப்பு.!
சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும். தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 13 பேர் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது . இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மற்றோரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது. அதிலும், முக்கியமாக புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை அறிவிப்பு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதில், தமிழகமும் ஓன்று, தமிழக்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.