மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 10ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த பகுதி தீவிரமடையுமா அல்லது மண்டலமாகுமா போன்ற தற்போதைய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில் தமிழக்தில் மீண்டும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை இன்று முதல் படிப்படியாக விலக தொடங்கும் நிலையில், இதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறியுள்ளது. மேலும், லட்சத்தீவு, மாலத்தீவு கடல்பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…