29ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்
வருகின்ற 29ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 29-ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் சேலம், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.