வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெய்துவரும் கனமழையால் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என அரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த- 4ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 2 நாளில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.