உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி-இன்று வெளியாக வாய்ப்பு
- 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பாணை இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி பகுதிகளை தவிர்த்து ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையறை செய்த பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கெடு விதித்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.