தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 24,405 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்..
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,405 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,72,751 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,062 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 460 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,665 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 32,221 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 18,66,660 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,79,438 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,81,96,279 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 2,80,426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…