பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Default Image

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13-ஆம் தேதி தொடங்கியது. பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த சமயத்தில்,  பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்திருந்தது.

மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதுகுறித்து அரசியல் கட்சிகளின் தலைவர் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் 50,674 பேர் எழுதவில்லை என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி இருந்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில், பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்குகிறோம் என்றும் மாணவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சிக்கிறோம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்