ஆம்ஸ்ட்ராங் கொலை : குஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடபட்டுள்ளது.
பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த 11 பேரில் திருவேங்கடம் என்பவரை விசாரணைக்காக போலீசார் சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்து இருந்த பொருட்களை வைத்து காவல்துறையினரை தக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
அது மட்டுமின்றி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளியா என்ற கேள்விகளும் பல தரப்பில் இருந்து எழுந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
வீடியோவில் “ஆம்ஸ்ட்ராங் வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெருவில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக நோட்டமிட்டு செல்கிறார். அதற்கு பின் இரண்டு பேர் தனி தனியாக பைக்கில் வருகிறார்கள். பின், அனைவரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொண்டு வந்த கத்தியால் கொடூரமாக வெட்டினார்கள்.
இதனை பார்த்த அவருடன் இருந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்ற முன் வந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அவர்களையும் கத்தியை வைத்து தாக்க முயன்றார்கள். இதனால் அவர்களும் தப்பி ஓடினார்கள். கொலை செய்துமுடித்த பின் அனைவரும் தப்பி ஓடினார்கள். கைது செய்யப்பட்டு இருப்பவர்களின் பெயர்களை தெளிவாக ரவுண்ட் செய்து போலீசார் வெளியீட்டு இருக்கிறார்கள்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…