ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஜனவரி 5 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றது.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை முழுக்கமுழுக்க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகுறித்த விஷயங்களையே பேசினேன்.திருவாரூர் தேர்தல் குறித்து பாஜகமாநில தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட்டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை நேற்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்று மூன்றாவது நாள் விவாதம் நடைபெறுகிறது.
ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய மாநகராட்சிகளை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.இதை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்கிறார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…