பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இன்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்தியா சார்பில் 18வயதான பிரிவின் குமார் பங்கேற்றார். இந்த போட்டியில், பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற பிரவீன் குமார், 2.7மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையைப் படைத்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் தகுதிச்சுற்றில் 4-வது இடம் பிடித்து பிரவீன் குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு முன் பிரவீன் குமார் உலக பாரா தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2.05 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பிரவீன் குமாருக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், டோக்கியோபாராலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றிப் பயணம் மற்றும் சாதனைகளைத் தொடர்கிறது. புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது, வரும் செப்டம்பர் 5-ம் தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…