பெண்களை பாதுகாக்க வந்துவிட்டது புதிய ஆப் ..!
தமிழக அரசு சார்பில் தற்சமயம் KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது தமிழகத்தில் சமீபகாலமாக கொலை,கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது, எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இப்போது கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்பாக என்னதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடம் இருக்கின்ற பயமானது மாறத நிலையில் தாம் தமிழகம் இருக்கின்றது.
இதைக்கருத்தில் கொண்டு மக்களுக்கு பயன்படும் விதத்தில் ஒரு புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது .
இதைதொடர்ந்து பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்பு இந்த KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற இரண்டு மொபைல்போன் செயலியை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். KAVALAN Dial 100 என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அவசர காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள இயலும். அப்போது, தொடர்புகொள்பவர்களின் முகவரியும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியும்.
“KAVALAN SOS” அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அவர்கள், அவசரத் தேவையின்போது, அந்த செல்போனை அதிரச் செய்தாலே, உடனடியாக அவர்களுடைய இருப்பிடத் தகவல் மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் அவர்கள் “KAVALAN SOS” செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள் / நண்பர்கள் எண்ணுக்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.