வெளிநாடு செல்லும் தமிழர்களை கண்காணிக்க புதிய ஆப்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதில் தற்போது இஸ்ரேல் கையே ஓங்கி நிற்கிறது. ஹமாஸ் அமைப்பை விட பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

தொடர் தாக்குதல், போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு. ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இதுவரை 4 விமானங்கள் மூலம் 918 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

இஸ்ரேல் To இந்தியா : 274 பயணிகளுடன் 4வது விமானம் டெல்லி வந்திறங்கியது.!

இதில் இஸ்ரேலில் சிக்கி தவித்து, டெல்லி வந்த தமிழர்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் தமிழகம் வரவழைக்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேலில் படிப்பதற்காக சென்று போர் காரணமாக பாதியில் வந்தவர்களின் படிப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்கள் கல்வியை தமிழகத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என ஒரு துறை இருக்கிறது. அதே போல, திமுகவிலும் 3 திமுக எம்பிக்கள் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு தமிழர்கள் அயலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டிற்கு எவ்வளவு தமிழர்கள் படிப்புக்காக சென்றுள்ளனர், எவ்வளவு பேர் வேலைக்காக செல்கிறார்கள் என மொபைல் ஆப் மூலம்  தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் நலன் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

2 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

4 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

5 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

5 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

6 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

6 hours ago