கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தைப்படுத்த, புதிய செயலி; அமைச்சர் தொடங்கிவைத்தார்.!
கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட புதிய செயலியினை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக, அதற்கான மொபைல் செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தொடங்கிவைத்துள்ளார். கூப் பஜார்(Coop-Bazar) என்ற பொதுவான சந்தைப்படுத்தும் செயலியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட பொதுவான கூட்டுறவுச் சந்தை (Coop – Bazaar) செயலியினை துவக்கி வைத்தார். #CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat@CMOTamilnadu @mkstalin@OfficeOfKRP pic.twitter.com/GP7LEfnip5
— TN DIPR (@TNDIPRNEWS) July 6, 2023
இதன்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று, கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் கூப் பஜார்(Coop-Bazar) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.