BREAKING: புதிய அறிவிப்பு.! நாளை முதல் 1 மணி வரை மட்டும் கடை திறந்திருக்கும்.!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது.
ஆனால் பலர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை என்று பல புகார்கள் எழுந்துள்ளது.இந்நிலையில் நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதற்கு முன் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் பகல் 2.30 திறந்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுக்கு சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்