புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை கார்ப்பரேட்டுக்கு அடிமையாக்கும் – கனிமொழி!

Default Image

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை கார்ப்பரேட்டுக்கு தான் அடிமையாக்கும் என  திமுக எம்பி  கனிமொழி  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் பயிர்களை விளைவிக்கும் போது அதற்கான விலை எவ்வளவு என்பதை முன்கூட்டியே நிர்ணயித்து விட்டு, பொருளை விற்பவர்களிடம் ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால், எந்த மன உளைச்சலும் இன்றி விவசாய பணிகளில் ஈடுபடலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது. மேலும், இவ்வாறு செய்வதால் விலை வீழ்ச்சி எனும் பிரச்சனையிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவதாகவும், விலை பொருளுக்கான விலை உத்தரவாதம் கிடைத்து விடுவதாகவும் அரசு கூறியது.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த  ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்களும் கடந்த வாரம் இந்த திட்டத்தை எதிர்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கொண்டார்.விவசாயிகளும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவைத் திமுக உறுப்பினர் கனிமொழி, இந்த புதிய வேளாண் சட்டத்தினால் விவசாயிகள் கார்ப்பரேட்டுக்கு அடிமையாகிறார்கள், பொது விநியோக முறையை அடியோடு சீர்குலைக்க கூடிய இந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டியது நமது கடமை என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna
Kalaignar Centenary Hospital