முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவில் 19 அமைப்புச் செயலாளாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்துள்ளனர்
அதிமுகவில் ஏற்கனவே நிரப்பபட வேண்டிய நிர்வாகிகள் மற்றும் கூடுதல் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக வழி நடத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்
அதன்படி பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், சீனிவாசன், செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன், சி.வி,சண்முகம்,மைத்ரேயன், ஜெயக்குமார், சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட 19 பேர் புதிய அமைப்புச் செயலாளாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அதிமுகவின் துணைக் கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தென் சென்னை, வேலூர் கிழக்கு, தஞ்சாவூர், திருச்சி, தென் சென்னை, தேனி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட செயலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…