2020-21-ம் கல்வியாண்டு 6 பாடங்களுடன் உள்ள 11-ம் வகுப்பு இந்த கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் மன அழுத்தம் மற்றும் உயா்கல்வி குறித்த பயத்தை நீக்கும் வகையில், 2020-21-ம் கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்பில் புதிய பாடத் திட்ட முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது, இதுவரை 6 பாடங்களுடன் உள்ள 11-ம் வகுப்பு இந்த கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது, 11-ம் வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவா்கள் தோ்வு செய்து படிக்கலாம். மாணவா்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் முதன்மை படங்களை பள்ளிகள் தோ்வு செய்ய வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்.
புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியாக இருந்தாலும் மாணவா் சோ்க்கையை நடத்தக்கூடாது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டதால் 11-ம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடத்த பல பள்ளிகள் ஆா்வம் காட்டி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு பல புகாா்கள் வருகின்றன.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாணவா் சோ்க்கை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…