புதிய 11 திட்ட பணிகள்: ரூ.19.20 கோடி மதிப்பு.! முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. அந்த வகையில், இதுவரை தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு சென்று ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில், இன்று 20வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அம்மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, அங்குள்ள மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், அரசின் நடவடிக்கையால் தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கிரிவலம் செல்பவர்களுக்கு சாலை வசதி, நிழற்கூடம் உள்ளிட்ட வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிரிவலம் செல்பவர்கள் தங்கிச் செல்ல யாத்ரி நிவாஷ் திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது. திருவண்ணாமலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இதன்பின் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…

28 minutes ago

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…

44 minutes ago

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…

2 hours ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…

2 hours ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்… குறித்த நேரத்தில் கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.!

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் 9…

3 hours ago

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

13 hours ago