senthil balaji Omandurar Hospital [file image]
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும், கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மாணவர்கள் கடும் அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு! முழு விவரம்..
அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சில பரிசோதனைகள் வெளியில் இருந்த எடுக்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக நரம்பியல் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…