ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கம் தொடர்பான பேனரில் "WE STAND FOR WOMEN HARRASEMENT" என்று அச்சிடபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

tvk poster

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெற வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதால்தான், தவெக அறவழியில் போராடியது. ஆனால், தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட கூடாது என்ற அராஜகப் போக்குடன் அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டமென வலியுறுத்தினார்.

கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை போராட்ட களத்தில் களமிறங்காமல் இருந்து வந்த தவெகவினர் மகளிர் தினமான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு முன், இன்று காலை த.வெ.க தலைவர் விஜய், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பேசி வாழ்த்து தெரிவித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டையும் முன் வைத்து பேசியிருந்தார்.

இப்படி இருக்கையில், பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கக்கோரி, வேலூர் கிழக்கு மாவட்ட த.வெ.க சார்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக வைக்கப்பட்ட பேனரில் “WE STAND FOR WOMEN HARRASEMENT” என்று அச்சிடபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“WE STAND AGAINST WOMEN HARASSMENT” என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்பதற்கான அர்த்தம். இது தெரியாமல் போராட்ட களத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதில், கையெழுத்திட்டு சென்றனர். இதேபோல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தவறிய என்பதற்கு பதிலாக ‘தவரிய’ என்றும், கண்டித்து என்பதற்கு பதிலாக ‘கன்டித்து’ என்றும் எழுத்துப் பிழைகள் உள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் எழுத்து பிழை இல்லாமல் எப்போது தான் சரியாக அச்சிட போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்