நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு – நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி.!
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை : நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தியற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி மனு மீதான விசாரணை கடந்த ஜன.22ம் தேதி அன்று நடைபெற்றது.
அப்பொழுது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். முன்னதாக, இந்த வழக்கை சென்னை தொடுக்க முடியாது என நெட்பிலிக்ஸ் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற நெட்ஃபிளிக்ஸ் மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.