நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்ற நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் சையது வருகின்றன. அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.
அந்தவகையில், நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்த கோவையின் போத்தனூர் 95-ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜசேகர். நாட்டின் பெரும் தலைவர்களாகிய நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்று வேடம் அணிந்த கலைஞர்களுடன் சேர்ந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் ராஜசேகரின் வித்தியாசமான முறை அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…