நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள்!

Default Image

நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தின்னூர்நாடு எனும் பகுதியில் உள்ள கண்ணி பட்டியை சேர்ந்த 45 வயதான சாமிதுரை என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தேவனூர் வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரை அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்த பொழுது சாமிதுரை மருமகன் ராஜ்குமார் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சில மாதங்களுக்கு முன் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ராஜ்குமார் முன்னின்று மாமனாருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை பேசி எடுத்து கொடுத்ததாகவும், தட வழி பிரச்சனை இருந்ததால் குத்தகை எடுத்த நிலத்தில் சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விவசாயம் செய்ய முடியாததால் ராஜ்குமார் குத்தகை தொகையை திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் குத்தகை ஒப்பந்தம் தராமல் சாமிதுரை நாட்களை கடத்தியதால் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சமிதுரை தனக்கு சொந்தமான நிலத்தை 20 லட்சத்திற்கு விற்று மூன்று மகளுக்கும் சாமிதுரை பிரித்து கொடுக்காமல் வைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மாமனார் மீது கோபத்தில் இருந்த ராஜ்குமார் மற்றும் மற்றொரு மருமகன் பிரசாத் ஆகிய இருவரும் சேர்ந்து மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டு தங்களது நண்பர்கள் கார்த்திக் மற்றும் பழனியப்பன் முருகேசன், விஜயகுமார், சகாதேவன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து நிலம் ஒன்று விற்பனைக்கு வருவதாக கூறி அவரை  காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மது அருந்துவிட்டு அனைவரும் சேர்ந்து சாமி துறையின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிதுரையின் மருமகன் ராஜ்குமார், பிரசாத் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர் .தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
Devendra Fadnavis Pahalgam Attack
Nitish Kumar vaibhav suryavanshi
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school
Edappadi Palanisamy criticized TN CM MK Stalin
Pollachi