#BREAKING: நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா..!

தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு சமீபத்தில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் பதவி விலகினார். தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று துணைத் தலைவராக பதவியேற்ற திமுகவை சேர்ந்த ஜெயபிரபா பதவி விலகினார். முதல்வர் முகஸ்டாலின் உத்தரவு பெயரில் பதவி விலகுவதாக அமைச்சர் கணேசனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவை சார்ந்த ஜெயபிரபா போட்டியிட்டு வென்றது சர்சையானது. ஏற்கனவே திமுகவை சார்ந்த திருத்துறைபூண்டி நகராட்சி துணைத்தலைவர் பாண்டியன் ராஜினாமா செய்திருந்தார்.