நெல்லை நாடாளுமன்ற தேர்தல் களம்! அதிமுக VS திமுக VS அமமுக

Default Image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி:

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியானது திருநெல்வேலி, பாளையங்கோட்டை , ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதா புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த தொகுதியில் கடைசியாக நடந்த நான்கு நாடளுமன்ற தேர்தலை பார்க்கையில் இரண்டு முறை காங்கிரஸும், இரண்டு முறை அதிமுகவும் ஜெயித்துள்ளனர்.

1999-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் பி.எச்.பாண்டியன் வெற்றி பெற்றார். 2004-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆர்.தனுஷ்கோடி ஆதித்யன் வெற்றி பெற்றார். அதேபோல 2009-ஆம் வருடமும் காங்கிரஸை சேர்ந்த எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றார். கடைசியாக நடைபெற்ற 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்று திருநெல்வேலி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக,திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள்:   

Image result for aiadmk dmk candidate

இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் அதிமுக எம்பி பி.எச்.பாண்டியன் மகன் பவுல் மனோஜ் பாண்டியன் நிற்க உள்ளார். பி.எச்.பாண்டியன் ஏற்கனவே சேரன்மாதேவி எம்.எல்.ஏவாகவும், திருநெல்வேலி தொகுதி எம்.பியாகவும் இருந்துள்ளார். பவுல் மனோஜ் பாண்டியன் 2001-ஆம் ஆண்டு சேரன்மாதேவி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.மனோஜ் பாண்டியன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்று, வழக்கறிஞராக பணியாற்றியும், கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Image result for ttv dinakaran

திமுக சார்பில் தொழிலதிபர் ஞானதிரவியம் என்பவர் களமிறக்கபடுகிறார். இதேபோல டிடிவி.தினகரனின் அமமுக கட்சி சார்பில் ஞான அருள்மணி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி தொகுதியில் அமமுக கட்சி சார்பில் முதலில் போட்டியிட இருந்தது ராதாபுரம் எம்.எல்.ஏவாக இருந்த சினிமா தயாரிப்பாளரான மைக்கேல்ராயப்பன் நிற்பதாக இருந்தது.இந்த முடிவு திடீரென மாற்றப்பட்டு தற்போது ஞான அருள்மொழி நிற்க உள்ளார். இதில் முக்க்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இவர்கள் மூவரும் கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது ஆகும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்