நெல்லை மேயர் கொலை வழக்கு!வெளியான திடுக்கிடும் தகவல்
உமா மகேஸ்வரியின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு முதல் 2001-ஆம்ஆண்டு வரை திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி.
ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மூன்றாவது நாளான இன்று தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உமா மகேஸ்வரியின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் வீட்டில் பணிபுரியும் பெண் ஆவார்.அவர் தினமும் கார்த்திகாவின் வீட்டில் தான் பணிபுரிவார்.ஆனால் ஜூலை 23 ஆம் தேதி மட்டும் உமா தேவியின் வீட்டிற்கு வழக்கமாக பணிபுரியும் பெண் பணிக்கு வராத காரணத்தால் அன்று உமாவின் வீட்டிற்கு சென்று பணிபுரிந்துள்ளார்.பின்னர் மாலையில் கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவருடன் சேர்த்து பணிப்பெண்ணான மரியம்மாளும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் உமா மகேஸ்வரியின் வீட்டில் ஏற்கனவே பணிப்புரிந்த பெண் எங்கே ?மேலும் அந்த பணிப்பெண் இதுவரை என்ன ஆனார்….அவர் ஏன் கொலைசெய்யப்பட்ட நாளில் பணிக்கு வரவில்லை…இல்லை வந்திருந்தும் மறைந்துவிட்டாரா என்ற பல்வேறு கேள்விகள் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.எனவே போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பணிப்பெண் விவகாரம் கொலை சம்பவத்தில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.