பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசிய விவகாரம்! நெல்லை கண்ணன் அதிரடி கைது!
- ஞாயிற்று கிழமை நடந்த போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
- இதன் காரணமாக நேற்று இரவு பெரம்பலூயில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக திருநெல்வேலியில் கடந்த ஞாயிற்று கிழமை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின்போது பேச்சாளரும் எழுத்தாளருமான நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை இவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியையும், அமித்ஷாவை ஒருமையில் பேசியதாக கூறப்பட்ட நெல்லை கண்ணன் கைது செய்யபட வேண்டும் என பாஜக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர். ஆனால், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு திருநெல்வேலியில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றார்.
பின்னர், அங்கிருந்து பெரம்பலூர் தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் சென்று அங்கு தங்கியிருந்தார். பாஜகவினரின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போலீசார் அவரை பெரம்பலூர் தனியார் விடுதியில் நேற்று இரவு கைது செய்தனர்.