தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! – நெல்லை ஆட்சியர்
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை ஆட்சியர் கூறியதாவது, ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என்றும் அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை மக்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே இருப்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரும் 10-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில், நெல்லையில் தாமிரபரணி கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்கவும். யாரும் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம்.#Tirunelveli #Rains pic.twitter.com/n1vULNbIeD— District Collector, Tirunelveli (@Collectortnv) January 8, 2024