காலமானார் நெல் ஜெயராமன்…!இன்று காலை 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்…!
பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் காலமானார்.
உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இவருக்கு வயது 50 ஆகும்.
இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண்துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.அதுவும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நெல் ஜெயராமன் காலமானார்.சென்னையில் தேனாம்பேட்டை அப்போலோமருத்துவமனையில் இன்று காலை 5:10 மணிக்கு உயிர் பிரிந்தது.சென்னை தேனாம்பேட்டை ரத்னாநகர் 2வது தெருவில் நெல் ஜெயராமன் உடல் வைக்கப்படுகிறது. நெல் ஜெயராமன் உடலுக்கு இன்று காலை 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.மருத்துவமனையில் ஜெயராமன் சிகிச்சை பெற்றதற்கான செலவுகளையும் ஏற்றிருந்தார் சிவகார்த்திகேயன்.தற்போது மறைந்த நெல்ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துசெல்லும் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்.