வீட்டிற்குள் புகுந்த திருடனை விரட்டி பிடித்த அக்கம்பக்கத்தினர்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான சரளா என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது ஊரில் சந்தேகம் படும் விதமாக ஒரு நபர் சுற்றிக்கொண்டிருந்துள்ளார்.
அந்த நபர் திருடுவதற்காக சரளாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.தமது வீட்டிற்குள் யாரோ நுழைந்திருப்பதாக சுதாரித்து கொண்ட சரளா,அக்கம்பக்கத்து வீட்டினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திருடனை விரட்டி பிடித்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் திருடனை பிடித்துள்ளனர்.
மேலும் அவர் திருடுவதற்கு வைத்திருந்த கடப்பாரை கம்பி ,இரும்பு ராடுகள் மற்றும் பூட்டை உடைக்கும் நவீன கருவிகள் முதலியனவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.மேலும் அந்த நபரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை சேர்ந்த ராமச்சந்திரன் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.