அண்டை மாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்நிலையில், நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் அனைத்தும் வாகனங்களுக்கும் மாநில அரசு தடை என உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி, போன்ற வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ், போன்ற அவசர ஊர்திகளுக்கும் அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா ஆந்திர போன்ற மாநிலங்களின் எல்லைகள் மூடவும் மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.