உயர்மட்டக்குழுவில் இன்று விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குதல், மேலும் ஊதிய முரண்பாட்டை நீக்குதல் மற்றும் அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்குதல், 21 மாத நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்குதல் மேலும் 5000 பள்ளிகளை மூடும் திட்டத்தைக் கை விட வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய டிசம்பர் 4ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் 106 சங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மட்டும் இந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.
அதன்படி நேற்று தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் பங்கேற்றனர்.
இத பின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறுகையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.எவ்வித கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. முதலமைச்சர் பழனிசாமி எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை .உயர்மட்டக்குழுவில் இன்று விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…