கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்து மீண்டும் இன்று பேச்சுவார்த்தை
கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது .
சென்னை, கோவை ,மதுரை,திருப்பூர்,சேலம் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.எனவே இதற்கு முன் கோயம்பேடு சந்தையில் அதிகமான மக்கள் வந்து காய்கறிகள் வாங்கினர்.இதனால் தனிநபர் இடைவெளி பின்பற்றப் படாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் விளைவாக தான் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது .இதனால்தான் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கோயம்பேடு வியாபாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனையில் இடமாற்றத்திற்கான செலவை அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என்று தெரிவித்தார்.
மேலும் கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று தெரிவித்தார் .மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவிப்பு வெளியிட்டார்.